திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
x
திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அப்போது  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக அங்கு வந்த ஸ்டாலினுக்கு, திமுக மகளிரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடிகர் சத்யராஜ் உள்ளிடோரும் தொலைபேசி வாயிலாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்