பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை

திருப்பூர் கூலிபாளையத்தில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
x
திருப்பூர் கூலிபாளையத்தில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கூலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியின் தனியறையில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதில், கடந்த 22ஆம் தேதி ஆறு லட்சம் ரூபாய் பணம்  வைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது. தவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.  இதனிடையே, சிசிடிவி கேமராவை கைப்பற்றி சோதனை செய்ததில், காரில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்ப்ரே அடித்துவிட்டு, காரில் இருந்த  கயிறு மூலம் ஏடிஎம் இயந்திரத்தை இழுத்து உடைத்து, தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்ற காரை விஜயமங்களம் அருகே கொள்ளையர்கள் நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், மின்வாரியத்துக்கு வாடகைக்கு இயக்கப்பட்ட ரோப் உடன் கூடிய காரை திருடி, அதன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்னர் இயந்திரத்தை தங்கள் வாகனத்தில் மாற்றி எடுத்துச் சென்றது கண்டறிப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்