தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா
x
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதியும்,  வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள்  மார்ச் 22-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிஇதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை  தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதியும் நடைபெறுகிறது.

புதுச்சேரி இதேபோல் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி பேரவை தேர்தல் நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19-ம் தேதியாகும். 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதியும்,  வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்