ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
x
விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பயண தூரத்தை குறைக்கும் வகையில் சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையில் இந்த சாலை அமைய உள்ளது. 

காரைக்காலில் 491 கோடி ரூபாய் செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 44 கோடி ரூபாயில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இந்திராகாந்தி விளையாட்டரங்கில் 7 கோடி ரூபாயில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, 

விளையாட்டு துறையில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில்  இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 11 கோடியே 85 லட்ச ரூபாய்க்கு மகளிர் விடுதி, 

மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கடற்கரையில் 14 கோடியே 83 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்