அங்கீகாரம் இல்லாமல் பொறியியல் கல்லூரி - கே.எஸ்.அழகிரி, குடும்பத்தினர் மீது புகார்

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் பொறியியல் கல்லூரி - கே.எஸ்.அழகிரி, குடும்பத்தினர் மீது புகார்
x
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, காமராஜர் கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான  'கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் என்ற மாணவர், தாக்கல் செய்த மனுவில், முறையான விதிகளை பின்பற்றாமலும், மாணவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறியுள்ளார். மேலும், கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்