தனிக்கட்சி துவங்கி திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்

தமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...
தனிக்கட்சி துவங்கி திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்
x
1980களில் திரையுலகில் அறிமுகமான போதே, அரசியல் ஆர்வமும் கொண்டிருந்தார் விஜயகாந்த். மறைமுகமாகவே அவருக்கு திமுக மீது ஈர்ப்பு இருந்ததை அவரது படங்களில் பார்க்கலாம். ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் அன்றைய திமுக சார்பு நடிகர்கள் நிறைந்ததாகவே இருக்கும். சில படங்களில் திமுக அனுதாபி என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். திரைப்படங்களிலும் மற்ற நடிகர்களை போல இல்லாமல் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதைகள் தான் விஜயகாந்தின் பெரும்பாலான தேர்வாக இருந்தன. விஜயகாந்த் பேசும்  வசனங்களிலும் அரசியல் அனல் பறப்பது சகஜம். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சங்கத்தின் பெரிய அளவிலான கடன்களை அடைத்தவர், விஜயகாந்த். அப்போது நடந்த விழா ஒன்றில், கருணாநிதிக்கு தங்க பேனா ஒன்றையும் பரிசாக வழங்கினார், விஜயகாந்த். 

கருணாநிதி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அதே நேரத்தில், ஏழை, எளியவர்களுக்கு உதவுவதில் எம்ஜிஆரை பின்பற்றினார். தனிக்கட்சி துவங்கும் முன்பே தனது ரசிகர் மன்ற கொடியை படங்களில் அறிமுகம் செய்தார் விஜயகாந்த். அதன் தொடர்ச்சியாக 2005 செப்டம்பர் 14ம் தேதியன்று தேமுதிக கட்சியை  துவக்கினார், விஜயகாந்த். வல்லரசு, சுதேசி மாதிரியான பட காட்சிகளை விஷ்வலுக்காக பயன்படுத்தலாம்...

கட்சியை ஆரம்பித்த மறு ஆண்டே 2006 சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்ததோடு, விருத்தாசலம் தொகுதியில் அவரே களம் இறங்கினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 1977ல் எம்ஜிஆர், 1989ல் ஜெயலலிதா ஆகியோருக்கு அடுத்தபடியாக, தனது சொந்த கட்சி மூலமாக பேரவைக்குள் நுழைந்த  திரை நட்சத்திரம் அவர்தான். முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகளை பெற்ற அவரது கட்சி, அரசியலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த சூழ்நிலையில், இலங்கை போர், அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சினைகளில் திமுக காங்கிரஸ் கட்சிகள் மீதும் அன்றைய திமுக ஆட்சி மீதும் கடும் கோபத்தில் இருந்த இடதுசாரி கட்சியினருக்கு இந்த வாக்கு சதவீதம் ஒரு யோசனையை ஏற்படுத்தியது. இதனால்,  ஏற்பட்டதுதான்... அதிமுக தேமுதிக இடதுசாரிகள் கூட்டணி. 2011 சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. ஆட்சியை அதிமுக பிடிக்க,  இரண்டாம் இடத்துக்கு வந்தது, தேமுதிக... இதனால், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரானார் விஜயகாந்த். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவரான திரை நட்சத்திரம் அவர்தான். எதிர்க்கட்சி தலைவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஆனால், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுடன் நேரடி வாக்குவாதத்தில் விஜயகாந்த் ஈடுபட்டதால் அந்த கூட்டணி நீண்ட நாள் நீடிக்கவில்லை...

2016ம் ஆண்டு பேரவை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில், தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் இணைந்து மூன்றாவது அணி அமைந்தது. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக களமிறங்கிய அந்த அணிக்கு படுதோல்விதான் கிடைத்தது. தேர்தலில் விஜயகாந்தும் தோற்றுப் போக, கூடவே  உடல்நல குறைவும் சேர்ந்ததால்,  ஆக்டிவ் அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கிறார், விஜயகாந்த். தமிழக அரசியல் வரலாற்றில் திரை நட்சத்திரங்கள்  பலர், மின்னல்களாக மின்னி இருக்கின்றன. அவர்களை பற்றியும் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்