ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பதிவு : பிப்ரவரி 16, 2021, 06:59 PM
மகனுக்கு வலிப்பு நோய், வயிற்று வலி பிரச்சினை இருந்த விரக்தியில் 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகனுக்கு வலிப்பு  நோய், வயிற்று வலி பிரச்சினை இருந்த விரக்தியில் 2 பிள்ளைகளுக்கு விஷம்  கொடுத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்  பட்டசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். தச்சு வேலை பார்த்து வந்தார். இவரது   மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், விஷால் என்ற மகனும் இருந்தனர். கடந்த சில நாட்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் திடீரென இவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து பார்த்த போது மனைவி மற்றும் பிள்ளைகள் 2 பேரும் விஷம் குடித்த நிலையில் படுக்கையில் சடலமாக கிடந்தனர். மேலும் கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகன் வலிப்பு நோய் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

351 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

95 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

80 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

27 views

பிற செய்திகள்

எம்.டெக் மேற்படிப்பு - நீதிமன்றம் ஆலோசனை

அண்ணா பல்கலை கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டிலும், அடுத்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

18 views

அமித்ஷா பிப்.27-ம் தேதி தமிழகம் வருகை - அ.தி.மு.க. கூட்டணி மாநாட்டில் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

253 views

வரும் 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

77 views

அப்பவே அப்படி... சட்டப் பேரவை தேர்தலில் மெகா கூட்டணி

தமிழக தேர்தல் களத்தில் அமைந்த மெகா கூட்டணிகள் பற்றிய ஒரு தொகுப்பு...

128 views

உதய சூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

176 views

"ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

114 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.