சீர்காழி இரட்டை கொலை கொள்ளை சம்பவம் : நேரில் ஆய்வு நடத்த உள்ள சிபிசிஐடி எஸ்பி

சீர்காழியில் என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி ரவி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சீர்காழி இரட்டை கொலை கொள்ளை சம்பவம் : நேரில் ஆய்வு நடத்த உள்ள சிபிசிஐடி எஸ்பி
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த மாதம் 27-ம் தேதி நகை கடை உரிமையாளர் வீட்டில் இருவரை கொலை செய்துவிட்டு வடமாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி ரவி சம்பவ இடத்தை இன்று காலை ஆய்வு செய்ய உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்