இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: "ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்" - மத்திய அரசு அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTAG) முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம் - மத்திய அரசு அறிவிப்பு
x
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிமுக செய்திருந்தது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஃபாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 2 மடங்கு கட்டணம்  வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்