முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்... 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும்

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
x
முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்றும், டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளதால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்