அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் - மக்களவையில் எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, வெற்றி நடை போடும் என மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் - மக்களவையில் எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு
x
சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, வெற்றி நடை போடும் என மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடையை நீக்கி உரிமையை மீட்டு கொடுத்தது அதிமுக அரசு தான் என்று கூறிய அவர், தமிழகத்தில் 1.3 லட்சம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைக்க இருக்கும் சாலை உள்கட்டமைப்பு திட்டத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மேம்படும் என பாராட்டு தெரிவித்தார். தமிழகத்திற்கு அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெற்று கூச்சல் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினர். 


மத்திய பட்ஜெட்டில் அண்மையில் ஏற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என திமுக எம்.பி. கதிர் ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில், மக்களவையில் பேசிய அவர்,
வேலைவாய்ப்பை உருவாக்கவோ, தொழிலாளர்கள் பற்றியோ மத்திய பட்ஜெட்டில் எந்த திட்டங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு மற்றும் பள்ளி கல்வி, மதிய உணவு சட்டத்திற்கான ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாக விமர்சித்தார். 15 லட்சம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட, ஏழை மக்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார். விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய யூரியா போன்றவற்றின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது கொடுமையான செயல் என சாடிய திருமாவளவன், கூடுதல் வரிச் சுமையை உடனடியாக கை விடுவதோடு பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவையும் முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். 

மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பட்ஜெட் மீதான உரையில் பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரே ஒரு கல் மட்டும் நட்டுவிட்டு, இன்றுவரை கட்டிக் கொண்டே இருப்பதாக குற்றம்சாட்டினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மனமில்லாத மத்திய அரசு, அம்பானி, அதானி போன்ற செல்வந்தர்களுக்கு 20 லட்சம் கோடி வரி சலுகை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி  நிலுவை உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜோதிமணி, பாரதிய ஜனதாவோடு சேர்ந்து அதிமுகவும் அரியணையில் இருந்து அகற்றப்படும் என சாடினார். 

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ரவிக்குமார் எம்.பி, இந்தியாவில் மறு குடியேற்றம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது முகாம்களில் வசித்து வருவதாக குறிப்பிட்டார். அவர்களை இந்தியர்களாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ரவிக்குமார், பட்ஜெட்டில் மகளிருக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, உடனடியாக நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எஸ்சி எஸ்டி மக்களுக்கான நிதியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக ரவிக்குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்