அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு
பதிவு : பிப்ரவரி 11, 2021, 02:24 PM
தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம். இந்த நிலையில், சின்னங்களை பற்றி சின்னதா ஒரு வரலாற்று பின்னணியை பார்க்கலாம்..


சுதந்திரம் பெற்றதும் நடந்த தேர்தல்களில் எல்லாம் சின்னங்கள் என்ற கான்செப்டே கிடையாது. வண்ணங்கள் மட்டும் தான். காங்கிரஸ் கட்சி என்றால் மஞ்சள் நிற பெட்டி. இதுபோல, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ, அந்த கட்சிக்கான வண்ணப் பெட்டிகளுக்குள்  வாக்குச் சீட்டை போட வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தலில் தான் சின்னங்களே அறிமுகமாகின. அந்த தேர்தலில் காங்கிரசின் சின்னம் இரட்டை காளை. ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம். திமுகவுக்கு, அது முதலாவது தேர்தல் என்பதால் சுயேச்சையாக கருதி தனியாக சின்னம் ஒதுக்கவில்லை.

கருணாநிதிக்கு மட்டுமே உதய சூரியன் சின்னம் கிடைத்தது. அண்ணா, நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு கிடைத்த சின்னம், சேவல். 1962 தேர்தலில்தான் திமுகவுக்கு நிரந்தர சின்னமாக உதய சூரியன் கிடத்தது.

1972ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, மறு ஆண்டிலேயே சந்தித்த தேர்தல்,   திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தல். அதில்,  இரட்டை இலை சின்னம் அமோக வெற்றியை பெற்றுத்தர, அதுவே, கட்சியின் நிரந்தர சின்னம் ஆனது.

எம்ஜிஆர் மறைந்ததும் அதிமுக பிளவு பட்டபோது, ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அம்மாளின் அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஒரே சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது,  சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வதற்காக உயிருள்ள விலங்கு, பறவைகளை எடுத்துச் செல்லும் போக்கு வேட்பாளர்கள் மத்தியில் அதிகரித்ததால் அவை தடை செய்யப்பட்டன. இப்போதெல்லாம் உயிரற்ற பொருட்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சினனங்களாக வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல, அன்றைய தேர்தல்களில் எல்லாம், கூட்டணி கட்சியை தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுமாறு பெரிய கட்சிகள் நிர்பந்தம் செய்வது கிடையாது. 1980ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை குமரி அனந்தன் ஆரம்பித்திருந்தார். அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டது ரோஜாப்பூ என்ற தனி சின்னத்தில் தான்.

1996ம் ஆண்டு தேர்தலுக்கு நாற்பதே நாட்களுக்கு முன் ஜி.கே.மூப்பனார்  ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் என்ற சின்னத்தை பிரத்யேகமாக ஒதுக்கியது, தேர்தல் ஆணையம். 

சமீப காலமாக, புதிய கட்சிகளுக்கென பிரத்யேக சின்னத்தை ஒதுக்கும் நடைமுறை குறைந்து வருகிறது. இதனால்தான் மக்கள் நீதி மய்யம் வரையிலான புதிய கட்சிகளும் சின்ன பிரச்சினையை நீதிமன்றம் வரை பெரிய பிரச்சினையாக எடுத்துச் செல்கின்றன.

தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மக்களை பொறுத்தவரை சின்னம் என்பது பெரிய பிரச்சினை என்றே தெரிகிறது. 1980 தேர்தலில் குமரி அனந்தனின் ரோஜாப் பூ சின்னம் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுபோல, 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையால்,  அனுதாப அலை வீசியபோதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிங்கம் சின்னத்தில் தாமரைக்கனி, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் திருநாவுக்கரசர், பண்ருட்டியில் யானை சின்னத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் என வெற்றிக் கனியை பறித்தனர். 

2006 தேர்தலில் விருத்தாசலத்தில் முரசு சின்னத்தில் விஜயகாந்தும், 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனும் வென்றது அறிமுகமில்லா சின்னத்தில்தான். 1996ல் கட்சி ஆரம்பித்த நாற்பதே நாளில் தமாகா மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் புதியதான சைக்கிள் சின்னத்தில்தான். 

இப்படியாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், சின்னங்கள் சொல்லும் பெரிய சுவாரஸ்யஙகள் இன்னும் ஏராளமான இருக்கின்றன.  அவற்றையும் பார்ப்போம்..

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

94 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

45 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.