தமிழகம் வரும் தேர்தல் ஆணையர் தலைமை குழு

தமிழக சட்டப் பேரவை தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட, இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலையிலான குழு சென்னை வர உள்ளது.
x
மே மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட களப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வரும் 10 தேதி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வர உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் ஆகியோரும் வருகின்றனர். 2 நாட்கள் சென்னையில் தங்கி ஆலோசனை மேற்கொள்ளும் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் குழுவுடன், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரையும் சந்திக்கின்றனர். அதைத் தொடர்ந்து, 11ஆம் தேதி புதுச்சேரியிலும், 12ஆம் தேதி கேரளாவிலும், ஆய்வு செய்ய உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்