கிறிஸ்தவ பேரணி; இந்து, முஸ்லிம் வரவேற்பு - சமூக நல்லிணக்கம் பேணப்படுவதாக கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய பேரணிக்கு இந்து, முஸ்லிம் மதத்தினர், வரவேற்பு அளித்தது சமூக நல்லிணக்க நிகழ்வாக இருந்தது.
கிறிஸ்தவ பேரணி; இந்து, முஸ்லிம் வரவேற்பு - சமூக நல்லிணக்கம் பேணப்படுவதாக கருத்து
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய பேரணிக்கு இந்து, முஸ்லிம் மதத்தினர், வரவேற்பு அளித்தது சமூக நல்லிணக்க நிகழ்வாக இருந்தது. காணிக்கை மாதா தேவாலய திருவிழாவையொட்டி, மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் பேரணியில் உற்சாகமாக பங்கேற்றனர். 3 கிலோ மீட்டர் சென்ற பேரணியில், குளச்சல் பகுதி இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர், மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் வரவேற்றனர். மதத்தின் பெயரால் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையிலான வரவேற்பு நிகழ்வை, பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்