யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு
x
மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பகுதியில் உடலில் காயங்களுடன் சுற்றி திரிந்த 40 வயது யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியது. இதுதொடர்பாக விசாரணையை நடத்திய வனத்துறை தனிப்படையினர் ரைமன், பிரகாஷ் என்ற இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது வன விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் கொடூரமாக துன்புறுத்துவது போன்ற இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று இருவரும் கூடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி பாபு உத்தரவிட்டார்.ம மேலும், இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொடூரத்தை நிகழ்த்திய 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்