எம்பிசியில் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்பிசியில் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
x
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில்  சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை 6 மாதங்களில் திரட்டி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 1983ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த மூன்று ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், அரசு நியமித்த ஆணையம் பரிந்துரைகளை வழங்காத நிலையில், முன் கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்