இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 2ந் தேதி கூடுகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ந் தேதி கூட உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 2ந் தேதி கூடுகிறது
x
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, காலை 11 மணிக்கு,  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த , அவரை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் தனபால் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.  3 அல்லது 4 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள சூழலில், ஆளுநர் உரையில் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா விவகாரம், வேளாண்மை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப பிரதான எதிர்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்