ஆன்லைன் சூதாட்டம் - அவசர தடை ஏன்?

தற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் - அவசர தடை ஏன்?
x
தற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

ஆன்லைன் ரம்மி, போக்கர்  போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை எதிர்த்து, சம்பந்தபட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌ன. இது தொடர்பாக பதில் மனு அளித்த தமிழக  அரசு, தெலங்கானாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டி தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை கூறியதாக தெரிவித்த‌து. கடந்த 5 ஆண்டுகளில் 7 பேர் இது போன்ற விளையாட்டுகளால் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ள தமிழக அரசு, பணம் வைத்து விளையாடுவது குற்றமே என திட்டவட்டமாக தெரிவித்த‌து. மேலும் பந்தயம் வைத்து விளையாடுவதற்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்த‌து. இந்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி, விசாரணையை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த‌து. 


Next Story

மேலும் செய்திகள்