நாட்களுக்கு முன் மாயமான நபர் - கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு

4 நாட்களுக்கு முன் மாயமான ஒருவர் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டைக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாட்களுக்கு முன் மாயமான நபர் - கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மராட்டி பாளையம் என்ற இடத்தில் பாண்டுராவ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுயுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கிணற்றில் இருந்து சாக்குமூட்டை ஒன்றை மீட்டனர். அதனை அவிழ்த்து பார்த்தபோது, தலையில் பலத்த காயங்களுடன்  அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது வலது கையில் பாப்பு என பச்சை குத்தப்பட்டிருந்த‌து. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் கண்ட சிலர், அது தங்கள் நண்பரான ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக அவர் மாயமானதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த‌தும் விசாரணையில் தெரிய வந்த‌து. தகாத உறவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், பெண் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்