'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மார்கழி மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர் மழையில், அடியோடு மூழ்கியது மிகுந்த வேதனையளிக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவர் புயல் நிவாரணம் மற்றும், பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார். நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிவாரணத் தொகை என்ன ஆனது? மத்திய அரசிடம் கோரிய 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், "இனிமேல் தான் கணக்கு எடுக்கப் போகிறோம்" என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது என்றும் கூறி உள்ளார். "மார்கழி மழையால்" பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்