குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .
குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்
x
ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிஞராக முன்னிறுத்தப்படுவதும், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் இயக்குநர் ஆக்கப்பட்டதும் அத்துறை அறிஞர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது என சண்முக சுந்தரம் சுட்டிக்காட்டி உள்ளார். இந்நிலையில், சட்டத் துறையோடு எந்த தொடர்பும் இல்லாத குருமூர்த்தி, சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்வு இருக்கைப்  பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், குருமூர்த்தி தன்னை சட்ட அறிஞராகவும் வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்றும் சண்முக சுந்தரம் விமர்சித்துள்ளார்இப்போது, நீதிபதிகள்  நியமனத்தையே குருமூர்த்தி கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்களை விமர்சித்து, குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என்று  சண்முகசுந்தரம் கூறி உள்ளார். நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய - மாநில அரசுகளின் கருத்து பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர் என்றும் தெரிவித்துள்ளார். 
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயிக்கிறது, இதன்படிதான், நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும் சண்முகசுந்தரம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்