"தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டம்; முதலமைச்சர் வரலாற்றில் இடம் பெறுவார்" - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டம்; முதலமைச்சர் வரலாற்றில் இடம் பெறுவார் - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே   உள்ள விஜயகரிசல்குளத்தில் அம்மா மினி கிளினிக்கை  அமைச்சர் இராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 42 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் சத்துணவு திட்டம் கொண்டு வந்த எம்ஜிஆர், கோயில்களில் அன்னதான திட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா போல்  அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வரலாற்றில் இடம் பெறுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்