காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் - ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை நாளில் கூட பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் இருப்பதால், காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் - ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்
x
பணிச்சுமைகளுக்கு இடையே கடமை முக்கியம் எனக் இருக்கக் கூடிய காவலர்கள் விழாக்களை குடும்பத்தோடு கொண்டாடுவது கடினம். அந்த மனக்குறையை தீர்க்கும் வகையில், சென்னை மணலி காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. 

பாரம்பரிய உடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து  கொண்டாடினர். காவலர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள் கும்மி அடித்தும், உறி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனர். 

குழந்தைகளின் கோலாட்டம், பெண்களின் கோலப்போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் விளையாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

விளையாட்டில் வெற்றி பெற்ற அனைவரும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் கொண்டாட்டத்தால், மணலி காவலர் குடியிருப்பு விழாக்கோலம் பூண்டது.

Next Story

மேலும் செய்திகள்