நீதிபதி வினீத் கோத்தாரிக்கு பிரிவு உபசார விழா - 2 ஆண்டுகளில் 8,000 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார்

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி அடைந்ததாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீதிபதி வினீத் கோத்தாரிக்கு பிரிவு உபசார விழா - 2 ஆண்டுகளில் 8,000 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார்
x
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி இருந்து வந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு, காணொளி மூலம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, தாம் இதற்கு முன்பு பணியாற்றிய ராஜஸ்தான்,  கர்நாடகா உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும் போது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள் என்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற வீனித்  கோத்தாரி, இரண்டு கடந்த ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். அவரது இட மாற்றத்தை தொடர்ந்து, உயர் நீதிமன்ற்ததில் 50ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு வரும் திங்கட்கிழமை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்