103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் - லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த முடிவு

103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
x
சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுரானா நிறுவனத்துக்கு நேரில் சென்ற சிபிசிஐடி விசாரணைக்குழு பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இதனிடையே தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் நிறுவனத்திடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லாக்கரில் இருந்த தங்கம் கள்ளச்சாவி போட்டு திருடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து எத்தனை அசல் சாவி வழங்கப்பட்டது? அதன்பின்னர் போலி சாவி தயாரிக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பதில் கிடைக்க லாக்கர் நிறுவனத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்