நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் கைது

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
x
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வின் போது பரமக்குடியை சேர்ந்த மாணவி, போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை அளித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவி மீதும், அவரது தந்தையும், பல் மருத்துவருமான பாலச்சந்திரன் மீதும் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாலச்சந்திரன் குடும்பத்தோடு தலைமறைவாக இருந்த நிலையில், பெங்களூருவில், பெரியமேடு தனிப்படை போலீசார் பாலச்சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் சென்னை  கொண்டு வரப்பட்டு, எழும்பூரில் உள்ள ஆறாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், பாலச்சந்திரனை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்