பொங்கல் பரிசு - முதலமைச்சர் பழனிசாமியின் படம் பொறிக்கப்பட்ட துணி பை
கடலூரில் பொங்கல் பரிசு கொடுப்பதற்கான துணி பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூரில் பொங்கல் பரிசு கொடுப்பதற்கான துணி பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் பணத்துடன், பொங்கல் கொண்டாடுவதற்கு தேவையான அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் துணி பையில் வைத்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், துணி பையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்களை பொறித்து, அவற்றை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story