இன்று டிச.23 தேசிய விவசாயிகள் தினம்
பதிவு : டிசம்பர் 23, 2020, 02:58 PM
உலகமே உழவுத் தொழிலால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை எந்தச் சூழலிலும் விட்டு விலகாத விவசாயிகளை போற்றும் விதமாக இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது...
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார், தெய்வப்புலவர் திருவள்ளுவர். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார், பாட்டுக்கொரு புலவன் பாரதி. 

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே, நாம் சோற்றில் கை வைக்க வேண்டும் என்பது, யாவரும் அறிந்த பழமொழி. உழவுக்கு இணையான உயரிய தொழில் ஒன்று உலகில் இருக்க முடியாது. 

இந்தத் தொழிலில் அரும்பாடு பட்டு உழைத்தும், வீட்டுக்கு எதையும் எடுத்துச் செல்ல முடியாமல் வறுமையில் நொந்து கிடந்த விவசாயிகளின் நலனுக்காகவே, வெறும் ஏழு மாத காலமே பிரதமராக இருந்த, சவுத்ரி சரண் சிங் ஜமீன் தாரி ஒழிப்பு முறை சட்டத்தைக் கொண்டு வந்தார். 

விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் வகையில், வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும், அவர் அறிமுகப்படுத்தினார். அவரின் நினைவாகவே, டிசம்பர் 23ஆம் தேதியான இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

உழவுத் தொழில் பெருமைக்குரியது என்றாலும், இழப்புகளையே அதிகம் சந்திப்பதாக, இப்போதும் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் விவசாயிகள். 

காய்ந்து கெடுத்தது, பேய்ந்தும் கெடுத்தது என்பார்கள்... அந்த வலியின் மொழியை வாய்விட்டு கதறும் விவசாயிகளின் நிலை, இன்னமும் மாறவே இல்லை. இயற்கையோடு உழவுத் தொழில் ஒன்றி இருப்பதே, இத்தனை துயரங்களுக்குக் காரணம். 

விவசாயிகளின் துயரைத் துடைத்து, வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என வாக்குறுதி அளித்த மோடி தலைமையிலான பாஜக அரசு. அதன் தொடர்ச்சியாக, மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. 

இந்தச் சட்டங்களால் விவசாயிகள் தரம் பன்மடங்கு உயரும் என்று மத்திய அரசு தெரிவித்தாலும், குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை, இந்தச் சட்டங்கள் பறிப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசில் அங்கம் வகித்த கூட்டணி கட்சியை சேர்ந்த  ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.   

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களின் விவசாயிகள், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி சலோ என்ற பேரணியாக வந்த நிலையில், எல்லைகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளை எட்டியுள்ளது. 

அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மறுபுறம், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விளக்கக் கூட்டங்களை பா.ஜ.க.-வினர் நடத்துகின்றனர். 

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை, நாளை குடியரசுத் தலைவரிடம் வழங்க இருக்கிறது, காங்கிரஸ்
  
இந்தியாவின் முதுகெலும்பாக, 70 சதவீதம் மக்களின் நேரடி வாழ்வாதாரமாக விளங்கும் உழவுத் தொழில், செழித்தோங்க தேவையானதை செய்து வரும் அரசு, விவசாய சங்கங்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.   

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

27 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

31 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

79 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

40 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

111 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.