கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா? - சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான்  வசூலிக்கப்படுகிறதா? - சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவு
x
திருச்சியை சேர்ந்த அஞ்சலை என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த நவம்பர் மாதம் தனது கணவர் கொரோனா பாதிப்பு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய்  செலுத்தியதாகவும், பின்னர் 2 நாட்கள் கழித்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்  செலுத்த மருத்துவமனை தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.  எனவே அரசு நிர்ணயம் செய்த தொகையை தான் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கின்றனவா என்பதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்