நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரம் - மாணவியும் தந்தையும் ஆஜராகாமல் தலைமறைவு
பதிவு : டிசம்பர் 18, 2020, 02:45 PM
நீட் மதிப்பெண் முறைகேடு விவகாரத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் தலைமறைவு ஆகியுள்ளனர்.
நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்து நேர்காணலில் பங்கேற்றதாக ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி மற்றும் அவரது தந்தை பாலசந்திரன் ஆகியோரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அவர்களை தேடி தனிப்படை செல்லும் என போலீசார் தெரிவித்தனர். சென்னை, பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது சம்மனுக்கு இன்று ஆஜர் ஆகவேண்டும் என போலீசார் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை மாணவி தீக்க்ஷிதா, அவரது தந்தை பாலசுந்தரம் ஆஜராகவில்லை. இதனிடையே, போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த மாணவர் மீதும் காவல்துறையில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

332 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.