"ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்" - நீதிபதிகள்

ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் - நீதிபதிகள்
x
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொன்குமார் என்பவர், கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய மொழியாக ஆக்க வேண்டும் எனக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணை வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர், விருப்ப பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என தெரிவித்தார். அப்போது, பிரெஞ்சு, ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால், தமிழ் நாட்டில் தமிழ் மொழியை கற்க கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இது போன்ற பதிலை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றனர். பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறி வருவதையும் சுட்டிக்காட்டினர். தமிழ் மொழியை மட்டும் கேட்கவில்லை, அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என்றும், இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து, விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை   நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்