சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்கள் முடக்கம் - ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
x
சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு  சொந்தமான 2,000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை தொடர் சொத்து முடக்க நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்