பொறியியல் தரவரிசையில் முதல் 10 இடங்கள் - தமிழக பாடத்திட்டத்தில் படித்த ஒரு மாணவருக்கு மட்டுமே இடம்

இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களில், ஒரு மாணவர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் இடம்பிடித்துள்ளார்.
x
பொறியியல் கலந்தாய்வுக்கு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 95 ஆயிரத்து 693 பேரும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த 15 ஆயிரத்து 133 பேரும், ICSE பாடத்திட்டத்தில் பயின்ற 583 பேரும், இதர பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 440 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், கடந்த 28ம் தேதி   வெளியிடப்பட்டது. இதில் முதல் பத்து இடங்களில் ஒரு மாணவர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர் ஆவர். மேலும் 2 மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும்,  3 மாணவர்கள் ஆந்திர மாநில பாடத்திட்டத்திலும், ஐசிஎஸ்இ மற்றும்  கர்நாடகா பாடத்திட்டத்தில் தலா ஒரு மாணவரும், தெலங்கானா பாடத்திட்டத்தில் 2 மாணவர்களும் இடம்பிடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்