தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை எடுத்தது தவறு - ஸ்டாலின் கண்டனம்

"ஜி.எஸ்.டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியை, மத்திய அரசு, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவது இறையாண்மை மீறும் செயல் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை எடுத்தது தவறு - ஸ்டாலின் கண்டனம்
x
தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை எடுத்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் ஒரு கடிதம் கூட எழுத முன்வரவில்லை என அறிக்கையில் கூறியுள்ளார். குதிரை குப்புறத் தள்ளியது மில்லாமல், குழியும் பறித்து விட்டது என்பது போல், மாநிலங்களுக்காக வசூல் செய்த பணத்தையே, மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தி இருப்பது, இறையான்மையை மீறும் செயல் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்