முக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்
பதிவு : செப்டம்பர் 26, 2020, 05:08 PM
காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக கவசம் அணியவில்லை என கூறி முதியவரின் கையில் வைத்திருந்த பையை தரையில் கொட்டி பார்த்ததோடு, அபராத தொகையை கட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தற்போது தான் முக கவசத்தை கழட்டியதாக முதியவர் கூறியதை கேட்காமல், நகராட்சி ஊழியர்கள் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இது தொடர்பான புகார்கள் ஏற்கனவே வந்த நிலையில், இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.