தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5.52 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 337 பேருக்கு தொற்று உறுதியானது.
x
தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 337 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 406 பேர் குணமடைந்த நிலையில், 76 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 974ஆக அதிகரித்துள்ளது. தற்போது, தமிழகம் முழுவதும் சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 
4ஆயிரத்து 348 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 831 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 19 மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது. மருத்துவமனைகளில் 10 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்