கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் யுவராஜூக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றம்
x
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கல்லூரியில் படித்த சக மாணவியுடன் பேசிக கொண்டிருந்த போது தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், அழைத்துச் சென்றார். மறுநாள் அவர் தலைதுண்டான நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் மீட்கப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், சிறையில் இருக்கும் யுவராஜ், தனக்கு ஜாமீன் வழங்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நிராகரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரித்து முடிக்க, தமிழக காவல்துறைக்கு மேலும் 6 மாதம் காலஅவகாசம் வழங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்