கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 2 பேர் மரணம் - "விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் மின் துண்டிப்பால் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
x
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் மின் துண்டிப்பு காரணமாக ஐசியூவில் இருந்த நோயாளிகள் 2 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை வளாகத்தில் கட்டுமான பணியின் போது ஒப்பந்ததாரர் மின்சார வயர்களை துண்டித்ததால் இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கட்டட பணியின் போது வயர்கள் துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்