சுவற்றில் விளம்பரம் எழுவதில் திமுக - பாஜக இடையே மோதல்
பதிவு : செப்டம்பர் 22, 2020, 05:09 PM
சுவற்றில் விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று திமுக- பாஜக இடையே நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே சுவற்றுக்காக அரசியல் கட்சிகளின் இந்த போட்டி தொடங்கியிருப்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையை அடுத்த நங்கநல்லூர் வோல்ட்ஸ் காலனி 50 அடி சாலையில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் சுவற்றில் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது... பிறந்தநாள் தான் முடிந்து போயிற்றே என நினைத்த திமுக அந்த விளம்பரத்தை அழித்து விட்டு அதன்மேல் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்த விளம்பரத்தை எழுதியது... இதை பார்த்து கொதித்து போய் விட்டனர் பாஜக நிர்வாகிகள்... எங்களின் விளம்பரத்தை அழித்து விட்டு எழுத நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய படி கூட்டமாக களத்தில் இறங்கினர். இதனால் திமுக, பாஜக இடையே வார்த்தை போர் கிட்டத்தட்ட வன்முறையாக மாறியது. இரு தரப்பும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, திமுக நிர்வாகியான நடராஜன், தன் இருசக்கர வாகனத்தை பாஜக மகளிரணியை சேர்ந்த 2 பெண்கள் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் பெண்கள் 2 பேருமே படுகாயமடைந்தனர்... விபத்து ஏற்படுத்தும் நோக்கில் அவர் செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் நடராஜனை துரத்திச் சென்று அடித்தனர்... இதில் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது... படுகாயங்களுடன் இருந்த திமுக நிர்வாகி நடராஜனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் இரு கட்சி தரப்புக்கும் தெரியவரவே, இரு தரப்பும் நங்க நல்லூர் பகுதியில் குவிந்தது... தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து இருதரப்பும் வாக்குவாதம் செய்யவே, போலீசார் இவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருவருமே அதை காது கொடுத்து கேட்காமல் கோஷங்கள் எழுப்புவதிலேயே குறியாக இருந்தனர். சுவர் உரிமையாளரின் அனுமதி பெறாமல் இனிமேல் யாரும் விளம்பரம் எழுதவே கூடாது என போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். எல்லாம் முடிந்த பிறகு இடத்தை விட்டு கலைந்து போகாமல் இருந்த பாஜகவினர் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் திமுக நிர்வாகி நடராஜனை போலீசார் கைது செய்தனர். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதே சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் இப்போதே களை கட்டி வருகிறது. சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள சுவர்களை குறிவைத்து இப்போதே அரசியல் கட்சிகள் விளம்பர கோதாவில் குதித்து வருகிறது... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

352 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

142 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

"சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார்" - ஜெகன்மோகன்ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

29 views

தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

102 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

281 views

தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

28 views

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

246 views

திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.