விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம் - போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 04:10 PM
மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மலை மீது மரத்தில் தூக்கு போட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் - பாண்டியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் இதயக்கனி. இவர், தன் அத்தை மகேஸ்வரியின் மகளான புனிதாவை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இருந்தபோதிலும் காதல் ஜோடிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இதயக்கனி மீது புனிதாவின் குடும்பத்தினர் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலைய சார்பு ஆய்வாளரான ஜெயகண்ணன், விசாரணைக்காக இதயக்கனியின் சகோதரர்கள் சந்தோஷ் மற்றும் ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்காக இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை, இந்த சூழலில் பெருமாள் குட்டம் மலைமீது இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கப் போவதில்லை என கூறிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

286 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

192 views

பிற செய்திகள்

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 views

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கடும் வாக்குவாதம்?

முதலமைச்சராக்கியது யார் என ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே செயற்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

22 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

43 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.