ஜிஎஸ்டி நிலுவை தொகை - தமிழக எம்.பி.க்கள் கேள்வி - மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:33 PM
தமிழகத்திற்கு 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் அளவிலான, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை, நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், திமுக உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர், ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டத்தின் படி கடந்த 2019 ஏப்ரல் முதல் மார்ச் 2020 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கவேண்டிய தொகை வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூலில் இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள குறைவின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 
தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  மாநிலங்களின் தனிப்பட்ட விருப்பப்படி இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 
================

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

104 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

38 views

பிற செய்திகள்

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

80 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

43 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டுவதா? - ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

46 views

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

68 views

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

55 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.