சசிகலாவுக்கு முன்பே சுதாகரன் விடுதலையா? - சசிகலா விடுதலையில் சிக்கல் நீடிப்பதாக தகவல்

சொத்து வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் சசிகலாவுக்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக கர்நாடகா சிறைதுறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
x
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.  நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த மூன்று பேரின் தண்டனை வருகிற பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிரது. இந்நிலையில், கர்நாடக சிறை விதிமுறைகளின்படி முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு என பேசப்படுகிறது. அந்த வரிசையில், சுதாகரன் தரப்பு, நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்டுவதற்கான ஆவணங்களை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேசமயத்தில் சசிகலா, இளவரசி தரப்பு சார்பில், இதற்கான ஏற்பாடுகள் தற்போதுவரை செய்யப்படவில்லை என தெரிகிறது. சசிகலா மீது முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா,  எழுப்பிய லஞ்சப் புகார் தொடர்பான வழக்கு கர்நாடக ஊழல் தடுப்பு அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக சசிகலா, இளவரசி தரப்பில் அபராத தொகை கட்டுவதற்கான ஆவணங்கள் தயார் செய்வதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.  எனவே, சசிகலா விரைவில் விடுதலையாகும் விஷயத்தில் சிக்கல்கள் நீடிப்பதாக கர்நாடகா சிறைதுறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்