தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்ய சென்னை தேர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மற்றும் இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையை தேர்வு செய்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
x
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 18- வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகமும், இந்திய மருத்து ஆராய்ச்சிக்கழகமும் இணைந்து  இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை இந்த கோவிஷீல்டு தடுப்பூசி, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில்
300 பேரிடம் செலுத்தி, சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசி, டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை, 14 நாட்களில் உருவாக்கும்.

இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து, உடனடியாக அதை அழித்து விடும்

28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும்.

2-ம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து,3-ம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு, தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்