ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் - தமிழக அரசு ரூ.5300 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
x
நடப்பாண்டில் 6 ஆயிரத்து 584 சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 406 மாநில நெடுஞ்சாலைகளும், ஆயிரத்து 376 மாவட்ட முக்கிய சாலைகளும் அடங்கும். மேலும், 3 ஆயிரத்து 647 மாவட்ட இதர சாலைகள், சிறப்பு திட்டத்தின் கீழ் 155 சாலைகளை மேம்படுத்தவும்  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சாலைகளின் தரத்தை மேம்படுத்துதல், அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கும்  முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்