சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது
x
நாகை அடுத்துள்ள கருவேலங்கடை கிராம நிர்வாக அலுவலர் அருள்அரவிந்தன், மஹாதானம் கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஹாதனம் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக மண் திருடுவதாக வி.ஏ.ஓ அருள் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து வி.ஏ.ஓ அருள் அரவிந்தன் சம்பவ இடத்திற்கு சென்றபோது,  கலசம்பாடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது செங்கல் சூளைக்கு மண் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. மண் ஏற்றி வந்த டிராக்டரை வி.ஏ.ஓ அருள் அரவிந்தன் மடக்கி பிடித்து நாகை வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாப்பாக்கோவில் வி.ஏ.ஓ சபரிநாதன், செம்பியன் மாதேவி வி.ஏ.ஓ கருப்பசாமி ஆகிய இருவரையும் உதவிக்கு அழைத்த வி.ஏ.ஓ அருள் அரவிந்தன், மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த கும்பல் மூன்று வி.ஏ.ஓ களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஊருக்கு நடமாட முடியாது என மிரட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்