"நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.
x
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ளார். கோவை மற்றும் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் புவியரசன் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்