அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் - இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாசன வாய்க்காலை திறந்துவிட்ட பொதுப்பணித்துறையினர், வடிகால் வாய்க்காலை திறக்காததால், 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் - இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை
x
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாசன வாய்க்காலை திறந்துவிட்ட பொதுப்பணித்துறையினர், வடிகால் வாய்க்காலை திறக்காததால், 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மஞ்சளாற்றில் இருந்து சிந்தாமணி கிராம பாசன வாய்க்காலில் பொதுப்பணித்துறையினர் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துள்ளனர். ஆனால், வடிகால் வாய்க்காலான சரபோஜி சட்ரஸை திறந்துவிடாமல் அடைத்துவிட்டதால், தண்ணீர் வெளியேற வழியின்றி வயல்களில் பாய்ந்தன. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்  பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்