ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசம் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர் பழனிசாமி

ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசம் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ​தொடங்கி வைத்தார்.
x
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக் கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள முகக்கவசம் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்