மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் மர்ம கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கோவையில் நள்ளிரவில் மேலாடை இன்றி ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் மர்ம கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
x
கோவை இருகூர் பகுதியில் நள்ளிரவில் ஒரு கும்பல் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள்  வெளியானது. அதுவும் மேலாடைகள் இன்றி கைகளில் ஆயுதங்களுடன் அந்த கும்பல் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. வீடுகளை நோட்டமிட்டபடி அவர்கள் செல்வதும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதேபோல் பீளமேடு பகுதியிலும் இதே கும்பல் முகத்தை மறைத்தவாறு சுற்றி வரும் காட்சிகளை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த கும்பல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Next Story

மேலும் செய்திகள்