"க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அநியாய தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என  கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது அதிர்ச்சியளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திட வேண்டும், எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும்,  பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி  என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர்  நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்